Published : 09 Oct 2019 04:08 PM
Last Updated : 09 Oct 2019 04:08 PM

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்

லித்தியம்-அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக அமெரிக்க, இங்கிலாந்து, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசை ராயஸ் ஸ்வேதிஷ் அகாதெமி இன்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜான் கூட்எனஃப், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பான் விஞ்ஞானி அகிரா யோஷினோ ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத லித்தியம்-அயன் பேட்டரிகள் கடந்த 1991-ம் ஆண்டு உலகச் சந்தையில் அறிமுகமாக இன்று உலகின் பல்வேறு இடங்களையும் ஆட்சி செய்து வருகின்றன. மொபைல் போன் முதல் மின்னணு வாகனங்கள் வரை அனைத்திலும் லித்தியம்-அயன் பேட்டரிகள் வந்துவிட்டன. குறிப்பிட்ட அளவு மின்சக்தியை சேமித்து வைக்கும் வகையில் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுகின்றன

டாக்டர் விட்டிங்ஹாம், லித்தியம் பேட்டரியில் இருந்து எலெக்ட்ரானை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் குட்எனப், லி்த்தியம் அயன் பேட்டரியின் செயல்திறனை இரு மடங்காக உயர்த்தும் ஆய்விலும், பேட்டரியின் பயன்பாட்டை பெருக்கவும், திறன்மிக்க வகையில் சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்ற ஆய்வுக்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

பேட்டரியில் இருந்து சுத்தமான லித்தியம் அயனுக்கு பதிலாக, தூய்மையான லித்தியத்தைதை பிரித்து எடுத்தமைக்காக டாக்டர் யோஷினோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த போன்ற லித்தியம் பேட்டரிகள் செயல்பாட்டுமுறைக்கு எளிதாக இருக்கும். இந்தஆய்வுகளால் லித்தியம் அயன் பேட்டரிகள் எடை குறைவாகவும், நூற்றுக்கணக்கான முறை சார்ஜ் செய்து பயன்படுத்தவும் முடிகிறது.

இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு ம் சேர்த்து 9.18 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ.5.61 கோடி) பரிசும், தங்கப்பதக்கமும், விருதுப்பட்டயமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப்பணத்தை 3 விஞ்ஞானிகளும் பகிர்வார்கள்.

இயற்பியல்

2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பவுதிக அண்டவியல் கண்டுபிடிப்புகளூக்காக ஜேம்ஸ் பீபிள்ஸ்க்கும், , நம் சூரியக்குடும்பத்துக்கு வெளியே சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிவரும் கோள்கள் பற்றிய கண்டுபிடிப்புக்காக மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

மருத்துவம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த 2 ஆய்வாளர்களுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளருக்கும் என மொத்தம் 3 பேருக்குஅறிவிக்கப்பட்டது.
உடல் செல், ஆக்ஸிஜன் குறித்து ஆய்வு மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வில்லியம் காலின், கிரேக் செமென்ஸா, இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ராட்கிளிஃப் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x