

மேற்கு ஆப்பிரிக்காவின் பெரும் துயராகியுள்ள எபோலா வைரஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 11,220 ஆக அதிகரித்துள்ளது என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
எபோலா நோய் வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல் மொத்தம் 27,514 நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
எபோலா வைரஸுக்கு அதிகம் உயிரிழப்பு ஏற்பட்ட நாடு லைபீரியா. இங்கு மொத்தம் 10,666 பேர் எபோலாவுக்கு பாதிக்கப்பட்டனர். சுமார் 4,800 பேர் மரணமடைந்துள்ளனர்.
லைபீரியாவுக்கு அடுத்தபடியாக சியாரா லியோனில் 3,932 பேர் எபோலாவுக்கு பலியாகியுள்ளனர், மொத்தம் 13,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கினியாவில் 2,482 பேர் எபோலாவுக்கு பலியாக, மொத்தம் 3,729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாலி, நைஜீரியா, செனகல், ஸ்பெயின், பிரிட்டன், மற்றும் அமெரிக்காவிலும் தனித்தனியான எபோலா பாதிப்புகள் தோன்றி வருகின்றன.