Published : 08 Oct 2019 02:53 PM
Last Updated : 08 Oct 2019 02:53 PM

பிறந்த நாளை புதின் எங்கு கொண்டாடினார் தெரியுமா?

ரஷ்ய அதிபர் புதின் தனது 67-வது பிறந்த நாளை சைபீரியாவில் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் அக்டோபர் 7 ஆம் தேதி 1952 ஆம் ஆண்டு பிறந்தார் புதின். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் முந்தைய பிறந்த நாள் அனுபவத்தைவிட, 67-வது பிறந்த நாளை மிகவும் நினைவுகூரும் வகையில் மிக சுவாரஸ்யமாக கொண்டாடினார்.

சைபீரியாவில் உள்ள வனப்பகுதிகளில் தனது பிறந்த நாளைக் கழித்திருக்கிறார் புதின். இதில் மலையேற்றம், காளான் உள்ளிட்ட வித்தியாசமான உணவுகளைத் தேடுதல் என அற்புதமான பயணத்தை புதின் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அவற்றில் சில படங்கள்

அதிபர் புதினுக்கு அரசியல்ரீதியாக ரஷ்யாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரது செல்வாக்கு வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது தனது எதிர்ப்புகளை அடக்கியாள்வதில்தான் பெரும் அக்கறை காட்டுகிறார்.

எதிர்ப்புகள் வெளியில் தெரியாமலும், எதிர்ப்பாளர்கள் செல்வாக்கு பெறாமலும் இருக்க புதின் பல தந்திரங்களைக் கையாள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புதினின் இந்தப் பயணம் விளம்பர யுக்தியாகவே பார்க்கப்படுகிறது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x