Last Updated : 09 Jul, 2015 12:47 PM

 

Published : 09 Jul 2015 12:47 PM
Last Updated : 09 Jul 2015 12:47 PM

லஞ்ச வழக்கு: இத்தாலி முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டு சிறை

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சம் கொடுத்த வழக்கில், இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (78). இவர் தனது பதவி காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்ததாக நிரூபிக்கப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேப்பல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசுப் பணியில் இடம்பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்று கட்சி உறுப்பினரை தனது கட்சிக்கு இழுக்க சுமார் 3 மில்லியன் யூரோக்களை சில்வியோ வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒப்புக் கொண்டதை அடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள சில்வியோ, 3 முறை இத்தாலி பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x