

இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர்துறந்த தமிழீழ விடுத லைப் புலிகளுக்கு பொதுஇடங் களில் நினைவஞ்சலி செலுத்த இலங்கை அரசு தடை விதித்துள் ளது. இது தொடர்பாக ராணு செய் தித் தொடர்பாளர் ருவாண் வாணிக சூர்யா கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப் பட்ட அமைப்பாகவே நீடிக்கிறது. ஆகவே, உள் நாட்டுப்போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்து வதை பொதுநிகழ்ச்சியாக அனுசரிக்க முடியாது. அது தடை செய்யப்படுகிறது. தனிப் பட்ட நபர்கள், போரில் உயிர் துறந்த தங்களின் அன்புக்குரியவர் களுக்கு மத சம்பிரதாய சடங்கு களின் அடிப்படையில் அஞ்சலி செலுத்தலாம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, உள்நாட் டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைக் கொண்டாடும் விதத்தில், கொழும்பு மத்தாராவில் மே 18ம் தேதி ராணுவ வெற்றி அணிவகுப்பு நடத்தப்படும் என வாணிகசூர்யா தெரிவித்தார்.