மோடியின் அழைப்பை ஏற்ற ஆஸி.பிரதமர்; இந்தியா வர ஒப்புதல்

மோடியின் அழைப்பை ஏற்ற ஆஸி.பிரதமர்; இந்தியா வர ஒப்புதல்
Updated on
1 min read

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி மாதம் டெல்லியில் 'Raisina Dialogue 2020’ சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்பு உரையாற்ற இருக்கிறார் ஸ்காட் மோரிசன்.

இந்த நிகழ்வு அடுத்தம் வருடம் ஜனவரி மாதம் 14 தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து சிட்னியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்திய வருகை இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான படியாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஸ்காட் மோரிசனுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in