

கிரீஸில் அகதிகள் தங்கியிருந்த முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தையும், பெண் ஒருவரும் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள், “கிரிஸுல் உள்ள லெஸ்போஸ் தீவில் சிரியா, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் 3,000 பேர் இருக்க வேண்டிய முகாம்களில் 10,000 க்கும் அதிகமான நபர்கள் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பெண் ஒருவரும், ஒரு குழந்தையும் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தீ விபத்தையடுத்து போதிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வராததால் அங்கு கலவரங்கள் அரங்கேறின. இந்நிலையில் கிரீஸில் உள்ள 10,000 அகதிகளை துருக்கி திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கிரீஸ் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கிரீஸுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அவ்வாறு வரும் மக்களில் பலரது படகுகள் கிரீஸின் ஏஜியன் கடலில் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் இவ்வாறு சுமார் 50 பேர் வரை இறந்ததாக கிரீஸ் தெரிவித்துள்ளது.