Published : 01 Oct 2019 01:32 PM
Last Updated : 01 Oct 2019 01:32 PM

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்ற முதல் ஐக்கிய அமீரகம் விண்வெளி வீரர்

சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஐக்கிய அமீரகம் நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் முதல் முதலாக அனுப்பப்பட்டுள்ளளார்.

கஜகஸ்தான் நாட்டிலுள்ள பைக்கோனுர் ஆய்வு மையத்திலிருந்து ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த 35 வயதான ஹஸ்சா அல் மன்சூரி சோயுஸ் MS-15 என்ற ராக்கெட் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் சர்வதேச ஆய்வு மையத்திற்கு செப்டம்பர் 25 ஆம் தேதி புறப்பட்டார்.

கஜகஸ்தான் நாட்டிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற முதல் விண்வெளி வீரர் மன்சூரி. இதன் காரணமாக கஜகஸ்தான் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிற நாட்டு நபர்களுடன் விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றடைந்த மன்சூரி ஐக்கிய அமீரகத்தின் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் வீடியோ மூலம் உரையாற்றினார்.

இதில் மன்சூரியிடம் மாணவர்கள், விண்வெளி அனுபவம் எவ்வாறு உள்ளது. எம்மாதிரியான உணவை உட்கொள்கிறீர்கள் போன்ற கேள்விகளை எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த மன்சூரி, தனது ஒரு நாள் விண்வெளி அனுபவத்தையும், விண்வெளி ஆய்வு மையத்திலிருந்த எடுத்த புகைப்படங்களையும் , வீடியோவையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மன்சூரி தனது குழுவினர்களுடன் அக்டோபர் மூன்றாம் தேதி பூமிக்குத் திரும்ப உள்ளார்.

இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம் கஜகஸ்தானின் கதாநாயகனாக மாறி இருக்கிறார் மன்சூரி என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x