

ஜெட்டா
சவுதி அரேபியாவில் மன்னரின் மெய்காவலர் திடீரென சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா மன்னர் சல்மானின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக இருந்து வந்தவர் அப்துல் அஜிஸ் அல் பஹ்கம் இருந்து வந்தார்.
இந்தநிலையில் ஜெட்டா நகரில் அவர் திடீரென சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அங்கு நண்பரை சந்திக்க சென்றபோது, அப்துல் அஜிஸ் அல் பஹ்கம் இந்த சம்பவம் நடந்துள்ளது. திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் முற்றியதாகவும், அதில் அப்துல் அஜிஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சவுதி அரேபிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. விரிவான தகவல் எதையும் வெளியிடவில்லை.
அதேசமயம் மத்திய கிழக்கில் மற்ற நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘சம்பவம் நடந்த உடன், அஜிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கொலையாளியை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்’’ என செய்தி வெளியிட்டுள்ளன.