Published : 28 Sep 2019 05:58 PM
Last Updated : 28 Sep 2019 05:58 PM

சிறந்த ஆசிரியர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்: 'குளோபல் டீச்சர் 2019' சர்வதேச விருதுபெற்ற கென்ய ஆசிரியர் பாராட்டு

லண்டன்,

சிறந்த ஆசிரியர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்; 2020ல் இந்த விருதுக்காக அவர்கள் பரிந்துரைக்கப்பட வேண்டுமென உலகின் சிறந்த ஆசிரியருக்கான'குளோபல் டீச்சர் விருது 2019' என்ற சர்வதேச விருதை வென்ற கென்ய நாட்டு பள்ளி ஆசிரியர் தெரிவித்து உள்ளார்.

பீட்டர் மொகயா தபிச்சி (37), கென்யா நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர், பிரான்சிஸ்கன் துறவியுமான இவர் ப்வானி கிராமத்தில் உள்ள கெரிகோ மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் இந்த ஆண்டுக்கான 'குளோபல் டீச்சர் 2019' சர்வதேச விருதை வென்றுள்ளார். இந்த விருதின் மதிப்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த விருது பெற்றது குறித்து பீட்டர் மொகயா தபிச்சி கூறியதாவது:

"உலகளாவிய ஆசிரியர் விருது கிடைத்தது உற்சாகமாக உள்ளது. இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. எனினும் ஒன்றை சொல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

இந்த விருது பெறும் விழாவின் போது, ​​பல இந்திய ஆசிரியர்களை நான் சந்தித்தேன், தங்கள் மாணவர்களை அவர்கள் எவ்வாறு ஊக்குவிக்கிறார்கள், பாடங்களில் எவ்வாறு ஈடுபடுத்துகிறார்கள் என்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகவும் அதில் புதுமைகள் செய்யக்கூடியவர்களாகவும் உள்ளனர் என்பதை நான் அறிவேன்.

அவர்கள் உண்மையிலேயே ஆசிரியர் பணிக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர், அவர்கள் கற்பிக்கும் குழந்தைகள் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமான பணிகளில் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

இந்தியா மிகவும் பிரகாசமான எதிர்காலம் பெறுவதற்கான அனைத்து கொடைகளையும் பெற்ற ஒரு நாடு. ஆனால் ஆட்டோமேஷன் அச்சுறுத்தலில் இருந்து தொழிலாளர்கள் வரை காலநிலை மாற்றம், வறுமையை எதிர்த்து போராடுவது போன்று அவர்கள் கடக்கவேண்டிய பெரிய சவால்கள் நிறைய உள்ளன.

சிறந்த கல்வி என்பது குழந்தைகள் எதிர்காலத்தை எதிர்கொள்ளவேண்டிய நம்பிக்கையை திறக்கும் திறவுகோலாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான சிறந்த மனவளக் கல்வி சிறந்த ஆசிரியர்களுடன் தொடங்குகிறது. அதனால்தான் குளோபல் ஆசிரியர் விருது 2020க்கு விண்ணப்பிக்க இந்திய ஆசியுர்களுக்கு முழு தகுதி இருப்பதாக நம்புகிறேன். ஊக்கம்மிக்க இந்திய ஆசிரியர்கள் இந்த விருதை பெறுவது விருதுக்கு பெருமையளிக்கும்.

இவ்வாறு உலகின் சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற கென்யாவின் பீட்டர் மொகயா தபிச்சி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x