உறவு வலுவாக உள்ளது: இந்தியா வரும் அமெரிக்க எம்.பி பேச்சு

இந்தியா வருகை தரும் அமெரிக் செனட்டர் பாப் மெனண்டஸ்.
இந்தியா வருகை தரும் அமெரிக் செனட்டர் பாப் மெனண்டஸ்.
Updated on
1 min read

வாஷிங்டன்,

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் இது கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் அமெரிக்க செனட்டர் பாப் மெனண்டெஸ் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில், காந்தியின் 150வது ஆண்டுவிழாவில் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தூதுக்குழுவினர் இந்தியா வருகின்றனர். அமெரிக்க-இந்தியா உறவை வளர்ப்பதற்காக இந்தப் பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து விவாதிக்க நியூஜெர்சி முழுவதிலுமிருந்து வந்த இந்திய-அமெரிக்க சமூகத் தலைவர்களுடன் அமெரிக்க செனட் பாப் மெனண்டெஸ் இதைக் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், தொழில்முனைவோர், குடிமை ஆர்வலர்கள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மெனண்டெஸ் பேசியதாவது:

"இந்தியாவுடனான எங்கள் உறவு மிகவும் முக்கியமானது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த உறவை நாங்கள் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும், இது இரு நாடுகளிலும் தலைமைத்துவ காலத்திற்கு அப்பால் நீடிக்கும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தக உறவும், இரு நாட்டுக்குமான பாதுகாப்பு உறவுகளும் வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க மக்களுக்கும் இந்திய மக்களுக்குமான உறவுகள்கூட முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவானதாக உள்ளது’’ என தெரிவித்தார்.

தனது இந்திய பயணத்தின்போது, மெனண்டெஸ் இந்தியாவின் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற உள்ள காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்பார். இது தவிர, 2008 மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை நினைவுகூறும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். வளர்ந்து வரும் பருவநிலை மாற்ற நெருக்கடியை எவ்வாறு எதிர்ப்பது என்பது பற்றி விவாதிக்க எரிசக்தி துறை அதிகாரிகளையும் அவர் சந்திப்பார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in