இலங்கை  வெள்ளம்: 45,000 மக்கள் பாதிப்பு 

இலங்கை  வெள்ளம்: 45,000 மக்கள் பாதிப்பு 
Updated on
1 min read

இலங்கையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திற்கு 45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக இலங்கை ஊடகங்கள், “இலங்கையின் தென் மற்றும் மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியானார். 45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் அளவு அதிகரிக்கும் என்று இலங்கை வானிலை மையம் தெரிவித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை தென்மேற்குப் பருவமழை மே முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த முறை தென்மேற்குப் பருவமழையின் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாககவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இவ்வருடத்தைப் பொறுத்தவரை கனமழை மற்றும் வறட்சி போன்றவை மாறி மாறி ஏற்பட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சுமார் 100 பேர் வரை பலியாகினர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 50,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in