

ஹூஸ்டன்,
அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் 1969ல் நிலவுக்கு செல்லும் பணிகளுக்காக ஹூஸ்டனில் கட்டப்பட்ட ஆய்வகக் கட்டப்பட்ட கட்டிடம் பிறகு பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அடுத்த ஆண்டு அந்த கட்டடம் இடிக்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சென்று நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து 50வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஜூலை 10 அன்று நாசா கொண்டாடியது. இதனை அடுத்து நிலவுக்கு சென்று வந்த பிறகு வீரர்களை ஆய்வுக்காக தனிமைப்படுத்தி வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆய்வகத்தை இடிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நாசா கூறியுள்ளதாவது:
1969ல் நிலவுக்கு செல்லும் பணிகள் முடிந்தபின் அந்த ஆய்வகத்திற்கு தனித்த முக்கியத்துவம் கருதி அக்கட்டிடத்தில் வேறு எந்த பணிகளும் நடைபெவில்லை. இந்தக் கட்டிடத்தில்தான் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் இருந்த மற்றும் அவரது சகாக்கள் இருந்தனர்.
நிலவு செல்லும் இலக்கை அடிப்படையாகக் கொடு இந்த ஆய்வகக் கட்டிடம் 1967 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. நிலவு சென்று திரும்பியதற்குப் பின் விண்வெளி வீரர்களுக்கு எந்தவிதமான நோயும் பாதிக்கவில்லை என்பதை அறிய தனிமையில் இருக்கவும் சந்திர பாறை மாதிரிகளை பாதுகாக்கும் விதமாகவும் இந்த ஆய்வகம் வடிவமைக்கப்பட்டது.
எனினும் இக்கட்டிடம் தற்போது மிகவும் பழுதடைந்து உள்ளதால் இக்கட்டிடம் இடிக்கப்படும் நிலையில் உள்ளது. எனவே இக் கட்டிடம் அடுத்த ஆண்டு இடிக்கப்பட உள்ளது.
2015 ஆம் ஆண்டின் பொருளாதார பகுப்பாய்வு, வரலாற்று கட்டிடத்தில் கட்டமைப்பு மற்றும் மின் பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றை பாதுகாக்க முடியாது என்றும் தீர்மானித்தது. இதனால் இங்குள்ள அறிவியல் சார்ந்த கலைப்பொருட்களை பாதுகாக்க அசல் ஆய்வகத்திலிருந்து வேறொரு மாற்றுக் கட்டிடத்திற்கு கொண்டுசென்று சேமிக்கப்பட்டது.
இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.