

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 450 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்லமாபாத், பெஷாவர், லாகூர் பகுதிகளில் மாலை 4 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 10 கி.மீ. இந்த நிலநடுக்கம் 8 முதல் 10 நொடிகள் வரை நீடித்தது.
கிஸ்தானில் மீர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் இரண்டாகப் பிளந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் கடுமையான நில அதிர்வுகளை உண்டாக்கியது.
இந்த நிலநடுக்கத்துக்கு நேற்று வரை 19 பேர் பலியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 450 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தபட்ட துறைகளுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.