Published : 24 Sep 2019 06:07 PM
Last Updated : 24 Sep 2019 06:07 PM

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதிப்பு- 19 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

பூகம்பத்தை அடுத்து இஸ்லாமாபாத்தில் அலுவலகங்களை விட்டு வெளியே வந்துள்ள மக்கள். | ஏ.பி.

வடக்குப் பாகிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வட இந்தியாவிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தில் 19 பேர் பலியாகி சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஊடகத்தரப்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பிஓகேயில் உள்ள மிர்பூர் பகுதியில் கார்களை விழுங்கும் அளவுக்கு சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் தோன்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான 8 பேர்களில் 3 குழந்தைகளும் அடங்கும். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் டெல்லி-என்சிஆர் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் , ”பாகிஸ்தானில் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்லமாபாத், பெஷாவர், லாகூர் பகுதிகளில் மால 4 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 10 கிமீ. இந்த நில நடுக்கம் 8 முதல் 10 நொடிகள்வரை நீடித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக...

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீதிகளுக்கு ஓடி வந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

ஏனெனும் பாகிஸ்தானில் மிர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் இரண்டாக பிளந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் கடுமையான நிலஅதிர்வுகளை உண்டாக்கியது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் சுமார் 50 பேர் பெண்கள், குழந்தைகள் உட்பட இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்ததாகவும் பாகிஸ்தானின் வடக்குப்பகுதியில் இஸ்லாமாபாத் உட்பட பல நகரங்களில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் ஜெலூம் நகருக்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் இந்த பூகம்ப மையம் இருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாகத் தெர்வித்துள்ளது.

பாகிஸ்தான் மிர்பூரில் சாலைகள் பிளவு ஏற்பட்டதை தொலைக்காட்சி சேனல்கள் காட்டி வருகின்றன. பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், ஸ்கர்து, கோஹாட், சர்சத்தா, கசூர், பைசலாபாத், சியால்கோட், அபோத்தாபாத், முல்டான் உள்ளிட்ட நகரங்களில் இந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x