

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
லட்சக்கணக்கான இந்தியர் களுக்கு உந்து சக்தியாக விளங்கி யவர் கலாம்.அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே விண் வெளித்துறையில் ஒத்துழைப்பு ஏற் படுவதற்காக பாடுபட்டவர்களுக்கு தூண்டுகோலாய் விளங்கினார். அப்துல் கலாம் மறைவால் துயரத் தில் ஆழ்ந்துள்ள இந்திய மக்களுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை யும் ஆறுதலையும் தெரிவிக்கின் றேன் என்று ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. விஞ்ஞானியும் ராஜ தந்திரியுமான அப்துல் கலாம் எளி மையான நிலையிலிருந்து இந்தியா வின் மாமனிதராக உயர்ந்தவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்றவர்.
இந்தியா-அமெரிக்கா இடையே உறவு வலுப்பெறவேண்டும் என் பதை ஆதரித்தவர். அமெரிக்கா வுக்கு 1962ல் பயணம் மேற்கொண்ட போது நாசா அமைப்புடன் நெருக் கத்தை வளர்த்து விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பு வலுப்பெற அரும்பாடு பட்டவர்.
மக்களின் குடியரசுத்தலைவர் என அவர் அழைக்கப்படுவது மிகவும் பொருத்தமானது. மக்கள் சேவையில் அவர் காட்டிய ஈடுபாடு இந்தியர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள கலாம் ஆதரவாளர்களுக்கும் உந்துசக்தி யாக விளங்கியது. இவ்வாறு ஒபாமா தெரிவித்துள்ளார்.