Published : 23 Sep 2019 11:43 AM
Last Updated : 23 Sep 2019 11:43 AM

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஈரான் 

அமெரிக்காவுடன் நிரந்தர அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறும்போது, “ நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயராக இருக்கிறோம். அமெரிக்காவுடன் நிரந்தர அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயராக இருக்கிறது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை மதிப்புமிக்கதாகவும், நிரந்தரத் தீர்வைப் பற்றியதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள சாரிஃப் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவை சந்திக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஈரானுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துவிட்டால் பொதுக் கூட்டத்தை ஈரான் புறக்கணிக்கக் கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நியூயார்க் சென்றிருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

மேலும் சமீபத்தில் சவுதி எண்ணெய் ஆலை கப்பல் தாக்கப்பட்டதன் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x