ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தக் கோரி சீன தேசிய கொடியை அவமதித்து ஹாங்காங்கில் தீவிர போராட்டம்

ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் மின்னணு டிக்கெட் பரிசோதனை கருவிகளை போராட்டக்காரர்கள் நேற்று சேதப்படுத்தினர். படம்: பிடிஐ
ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் மின்னணு டிக்கெட் பரிசோதனை கருவிகளை போராட்டக்காரர்கள் நேற்று சேதப்படுத்தினர். படம்: பிடிஐ
Updated on
1 min read

ஹாங்காங்

ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது, சீன தேசிய கொடியை காலில் போட்டு மிதித்தனர்.

சீனாவின் தன்னாட்சி பெற்ற ஒரு அங்கமாக ஹாங்காங் விளங்கு கிறது. எனினும், அதற்கென தனி சட்டம் உள்ளது. இந்நிலையில், ஹாங்காங் அரசு குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை கடந்த ஜூன் மாதம் நிறைவேற்ற முயன்றது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்க ளுடைய ஜனநாயகம் பறிக்கப் படுவதாகக் கூறி போராடி வருகின்றனர். இதனால் போராட்டக் காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இத னிடையே, இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது. ஆனாலும் கடந்த 4 மாதங்களாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஷதின் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அமைதியாக போராட்டம் தொடங்கியது. அப் போது, ஹாங்காங் மற்றும் சீன அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடு பட்டவர்களில் சிலர் காகிதங்களை கசக்கி வீசியதுடன், சிலர் சீன தேசிய கொடியை தரையில் போட்டு மிதித்தனர். பின்னர் அதை சுருட்டி வெளியில் வீசினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், போராட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டு களை வீசினர். இதனால் இருதரப் புக்கும் இடையே மோதலாக மாறியது.

மேலும் ஒரு ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின்னணு டிக்கெட் பரி சோதனை கருவிகளையும் போராட் டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர்.

ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அனைவருக்கும் வேண்டுமென்று கிளர்ச்சியாளர் கள் கோருகின்றனர். ‘ஒரு நாடு - இரண்டு நிர்வாக அமைப்பு’ என்ற சீனக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். ‘தீவு நாடு’ என்ற நிலையே நீடிக்க வேண்டும், அரசியல் உரிமைகள் எந்த வகை யிலும் பறிக்கப்படக் கூடாது என்று போராட்டக்காரர்கள் வலி யுறுத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in