Published : 21 Sep 2019 07:48 AM
Last Updated : 21 Sep 2019 07:48 AM

இந்தியா சார்பில் ஐ.நா. சபை கட்டிடத்தில் காந்தி சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

நியூயார்க்

ஐ.நா. சபையின் தலைமை அலுவலகக் கட்டிடம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில் 50 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காந்தி சூரியசக்தி பூங்கா இந்தியா சார்பில் அமைக்கப் பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு வரும் வகையில் இந்தியாவின் சார்பில் இது அமைக்கப்பட்டுள் ளது. மேலும் ஐ.நா. தலைமையகத் துக்கு இந்தியா சார்பில் அளிக்கப் படும் பரிசாக இது அமைந்துள்ளது.

செப்டம்பர் 24-ம் தேதி இங்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த சூரிய சக்தி பூங்காவைத் தொடங்கி வைக்கவுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டா டும் வகையில் இது உருவாக்கப்பட் டுள்ளது.

மேலும் அதே நாளில் காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு ஐ.நா. தபால்தலையும் இங்கு வெளியிடப்படவுள்ளது.

நியூயார்க்கிலுள்ள இந்திய தூதரகம், சாந்தி பன்ட் என்ற அரசு சாரா அமைப்பு, நியூயார்க் மாகாண பல்கலைக்கழகம் சார்பில் இந்த நிகழ்ச்சியின்போது 150 மரக்கன்று கள் நடப்படும். இந்த பூங்காவுக்கு காந்தி அமைதிப் பூங்கா என்று பெய ரிடப்படும்.

இத்தகவலை ஐ.நா.சபைக் கான இந்தியாவின் தூதர் சையத் அக்பருதீன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித் தார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா பொதுச் செயலர் அந்தோனியோ குத்தேரஸ், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், சிங்கப்பூர் பிரதமர் எம் லீ சியன் லூங், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ், நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உள் ளிட்டோர் கலந்துகொண்டு பேசவுள்ளனர். ஐ.நா. சபையில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவரைப் போற் றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x