Published : 20 Sep 2019 03:35 PM
Last Updated : 20 Sep 2019 03:35 PM

சந்திரயான் -2-இன் விக்ரம் லேண்டர் இறங்க முயன்ற பகுதியை படம் பிடித்த நாஸா ஆர்பிட்டர்

ஹூஸ்டன், பிடிஐ

சந்திர மண்டலத்தின் இதுவரை கண்டறியப்படாத தென் துருவத்திற்கு அருகே சந்திரயான் - 2-ன் விக்ரம் லேண்டர் இறங்க முயற்சி செய்த பகுதியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் நாஸா அனுப்பிய ரீக்கனையசான்ஸ் ஆர்பிட்டர் படங்களைப் பிடித்து அனுப்பியுள்ளது, என நாஸா அதிகாரி தெரிவித்தார்.

சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது, இதனையடுத்து மீண்டும் தொடர்பு கொள்வதற்கான இறுதிக் கட்டம் மிக நெருங்கி விட்ட நிலையில் நாஸாவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் இறங்க முயன்ற பகுதியிலிருந்து புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது, ஆனால் இந்தப் புகைப்படங்களை இன்னும் ஆய்வு செய்யவில்லை, ஆய்வு செய்யும் நடைமுறை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.

நாஸாவின் லூனார் ரீகனையசான்ஸ் ஆர்பிட்டர் (LRO) செப்டம்பர் 17ம் தேதியன்று தொடர்ச்சியாக சில இமேஜ்களை எடுத்து அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக நாஸாவின் கிரே ஹவுத்தலூமா பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, “எல்.ஆர்.ஓ. படங்கள் புரோசஸ் நிலையில் உள்ளஹ்டு” என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

செப்.21ம் தேதிக்குள் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்க வேண்டும், இல்லையெனில் அது இரவுக்குள் சென்று விடும். எல்.ஆர்.ஓ, உதவி ஆய்வு விஞ்ஞானி ஜான் கெல்லர், எல்.ஆர்.ஓ கேமரா இமேஜ்களைப் பிடித்துள்ளது, இந்த புதிய புகைப்படங்களை ஆய்வு செய்து முந்தைய படங்களுடன் ஒப்பிட்டு விக்ரம் லேண்டர் நிழலுக்குள் இருக்கிறதா, அல்லது புகைப்பட்டம் எடுக்கப்பட்ட இடத்திற்கு அப்பால் உள்ளதா என்பதை ஆராய்ந்து லேண்டர் புலப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நாஸா அந்தப் புகைப்படங்களின் தன்மையை ஆராய்ந்து வருகிறது. ஆர்பிட்டர் அந்தப் பகுதியைக் கடக்கும் போது பெரும்பாலான பகுதி இருளுக்குள் இருந்ததகா நாஸா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சந்திரனில் தென் துருவப்பகுதிகளில் இரவுக்காலங்கள் கடும் குளிராக இருக்கும். வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸாக இருக்கும். லேண்டரில் உள்ள உபகரணங்கள் இத்தகைய உறைபனி நிலையைத் தாங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்படவில்லை. மின்னணு வேலை செய்யாது என்பதோடு நிரந்தரமாகவே சேதமடையவே வாய்ப்பு. ஆகவே 21ம் தேதிக்குள் தகவல் தொடர்பை மீட்க முடியவில்லை எனில் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை ஐ.எஸ்.ஆர்.ஓ. கைவிட வேண்டியதுதான்.

இந்நிலையில் நாஸா ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்கள் ஐ.எஸ்.ஆர்.ஓ. ஆய்வுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x