தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் செல்ல வேண்டாம்: பாக். பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை

தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் செல்ல வேண்டாம்: பாக். பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை
Updated on
1 min read

இஸ்லாமாபாத்

தாக்குதல் நடத்துவதற்காக (ஜிகாத்) பாகிஸ்தானி யர்கள் காஷ்மீருக்கு செல்லக் கூடாது என்று அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ் தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஐ.நா. சபை, வல்லரசு நாடுகளிடம் முறையிட்டது. ஆனால் சீனாவை தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து காஷ்மீரில் வன்முறையைத் தூண்டும் வகை யில் இம்ரான் கான் தொடர்ந்து பேசி வந்தார். "ஆக்கிரமிப்பு காஷ் மீர் மக்கள், காஷ்மீருக்குள் நுழைய தயார் நிலையில் இருக்க வேண் டும். காஷ்மீருக்காக போரிட தயங்க மாட்டோம். அணு ஆயுத போர் வெடிக்கக்கூடும்" என பல்வேறு விதமாக மிரட்டல் தொனியில் பேசி வந்தார்.

இந்நிலையில் ஐ.நா. பொது சபை கூட்டம் விரைவில் தொடங்கு கிறது. இதில் பங்கேற்க உள்ள இம்ரான் கான் காஷ்மீர் விவகா ரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளார். இதன்காரணமாக இதுவரை மிரட் டல் போக்கில் பேசி வந்த அவர் திடீரென தொனியை மாற்றியுள் ளார்.

காஷ்மீரின் எதிரிகள்

பிரதமர் இம்ரான் கான் நேற்று கூறியபோது, "தாக்குதல் நடத்த (ஜிகாத்) பாகிஸ்தானி யர்கள் காஷ்மீருக்கு செல்லக் கூடாது. அவ்வாறு செல்பவர்கள் காஷ்மீரின் எதிரிகள், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைப்பவர் கள். ஐ.நா. சபையில் காஷ்மீருக் காக உரக்க குரல் கொடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி நகரில் இந்து மதத்தை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் தெய்வ நிந்தனையில் ஈடுபட்ட தாக குற்றம்சாட்டி அந்த பகுதி யில் பெரும் கலவரம் நடை பெற்றது. இந்து கோயில், இந்துக் களின் கடைகள், வீடுகள் சூறை யாடப்பட்டன.

இதுகுறித்து இம்ரான் கான் கூறியபோது, "கோட்கி சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாகிஸ்தானில் அனைத்து மதத்தினருக்கும் சமஉரிமை உள்ளது" என்று தெரிவித்தார்.

ஐ.நா. பொது சபை மாநாட் டில் பங்கேற்பதாலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட் டோரை சந்திக்க உள்ளதாலும் இம்ரான் கான் அடக்கத்துடன் பேசுவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in