

துருக்கியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் குறைந்தது 232 பேர் பலியாகினர். 190 பேரின் கதி தெரியவில்லை.
மேற்கு துருக்கியில் உள்ள மனிசா மாகாணத்தில் உள்ள சோமா பகுதியில் இந்த சுரங்கம் அமைந்துள்ளது. இதில் சுமார் 787 தொழிலாளர்கள் பணியில் இருந்த
போது செவ்வாய்க்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. சுரங்கத்தில் இருந்த மின் மாற்றியில் ஏற்பட்ட கோளாறுதான் வெடி விபத்துக்கு காரணம் என நம்பப்படுகிறது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர் களை மீட்கும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளதாக எரிசக்தித்துறை அமைச்சர் டேனர் யில்டிஸ் தெரிவித்
தார். இதுவரை 363 பேர் மீட்கப்பட்டுள்ளனர் 190 தொழிலாளர் களின் கதி தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
சுரங்கத்தில் சிக்குண்டவர்களை மீட்பதற்காக வந்தவர்களும் அங்கே ஏற்பட்ட புகை மூட்டம், கரி துகள் களால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சுரங்கத்தில் பல பிரிவுகள் இருந்தன அவற்றில் ஒன்று திறந்த படி இருந்ததால் அங்கிருந்த தொழிலாளர்களை காப்பாற்ற மீட்புப் பணியாளர்கள் செல்ல முடிந்தது. ஆனால் இரண்டாவது பிரிவு சுரங்கம் சரிந்ததால் அதிலிருந்த தொழிலாளர்கள் அதிலேயே சிக்கிக்கொண்டனர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.-ஏஎப்பி