

அமெரிக்காவில் உள்ள வங்கியில் ரூ.19 கோடி முறைகேடு செய்ததாக 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் சாக்ரமென்டோ முதல் மாடெஸ்டோ வரையிலான பல் வேறு நகரங்களைச் சேர்ந்த 25 வீடுகளை சிலர் வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள் ளனர். கடன் விண்ணப்பத்தில், வேலை, குடும்ப உறவு, வருமானம் உட்பட பல்வேறு தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், வங்கிகளுக்கு ரூ.19 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட் டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில், 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் ஜியோடேஷ்னா கரண் (43), பிரவீன் சிங் (36) மற்றும் மஹேந்திர பிரசாத் (53) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புல் சிங் (79), சுனிதா சிங் (6), நனி ஐசக் (69) மற்றும் மார்ட்டின் பரமி (42) ஆகிய 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட் டுள்ளது.
இவர்கள் மீதான குற்றச் சாட்டு நிரூபணமானால் ஒவ்வொரு வருக்கும் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அத்துடன் தலா 10 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.