

தாய்லாந்தில் கடும் மழையை தொடர்ந்து பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக உள்ள 33 பேர் பலியாகினர்.
இதுகுறித்து தாய்லாந்து ஊடகங்கள், “தாய்லாந்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாகாணங்களிலும், பிரபல சுற்றுலா தளமான கோ சாங் தீவிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தீவின் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சுமார் 32 மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை வெள்ளத்துக்கு சுமார் 33 பேர் பலியாகியுள்ளதாகவும் சாலைகள், பாலங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாய்லாந்தில் பல பகுதிகளில் மின்வெட்டு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 20,000க்கும் அதிகமான மக்கள் வெள்ள பாதிப்பு காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உணவுகள் கிடைக்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் போதிய உணவுகளும், அடிப்படை பொருட்களும் இதுவரை முழுதாக கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதனை தாய்லாந்து அரசு மறுத்துள்ளது.