Published : 16 Sep 2019 04:14 PM
Last Updated : 16 Sep 2019 04:14 PM

சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பாகிஸ்தான் 

இஸ்லாமாபாத்

சீனாவின் உதவியுடன், 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ககன்யான் திட்டத்தின் மூலம மனிதனை விண்ணுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. 2020-ம் ஆண்டில் ஆள் இல்லாமலும், 2021-ம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் முயற்சிக்கிறது.

பாகிஸ்தானின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹூசைன் தி நியூஸ் இன்டர்நேஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " சீனாவின் உதவியுடன் விண்ணுக்கு மனிதனை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் தேர்வு அடுத்த ஆண்டு தொடங்கும்.

எங்களுடன் சீனா முக்கியக் கூட்டாளியாக இருக்கும். முதல்கட்டமாக 50 வீரர்களைத் தேர்வு செய்வோம், 2022-ம் ஆண்டில் 25 வீரர்களாகக் குறைத்து, அதில் ஒருவரைத் தேர்வு செய்வோம். இந்த திட்டத்தில் பாகிஸ்தான் விமானப்படை முக்கியப் பங்காற்றும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அளிக்கும் பங்களிப்பு இந்த பிராந்தியத்துக்கு சிறப்பானதாக அமையும்.

விண்வெளிக்கு 1963-ம் ஆண்டு சோவியத் ரஷியா ராக்டெ அனுப்பிய பின், ஆசியாவில் 2-வதாக விண்வெளிக்கு அனுப்பிய நாடு பாகிஸ்தான். எங்கள் நாட்டின் விண்வெளி அறிவியலுக்கு பாகிஸ்தான் விண்வெளி அறிவியல் கல்வி மையம் முக்கியப் பங்காற்றி வருகிறது" எனத் தெரிவித்தார்

கடந்த ஆண்டு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரு செயற்கைக்கோள்கள், சீனாவின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. சீனாவின் எல்எம்-2சி நீண்டதொலைவு ராக்கெட் மூலம் இவை அனுப்பப்பட்டன. இதில் ஒரு செயற்கைக்கோள் கண்காணிப்பு செயற்கைக்கோளாகவும், 2-வது செயற்கைக்கோள் பாகிஸ்தான் வளங்கள் குறித்து அறியவும் அனுப்பப்பட்டது


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x