Published : 15 Sep 2019 08:58 AM
Last Updated : 15 Sep 2019 08:58 AM

தியானன்மென் சதுக்கம் புகழ் ‘பீரங்கி மனிதனை' புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் மரணம்

பெய்ஜிங்

சீனாவின் தியானன்மென் சதுக்க படுகொலைக்கு பிறகு, ராணுவ பீரங்கிகளை தனி மனிதனாக மறித்த நபரை (டேங்க் மேன்) புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் சார்லி கோல் (64), இந்தோனேசியாவின் பாலி பகுதியில் கடந்த 5-ம் தேதி கால மானார்.

சீன அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கில் உள்ள தியா னன்மென் சதுக்கத்தில் 1989-ம் ஆண்டு மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், 1989 செப்டம்பர் 4-ம் தேதி அதிகாலையில், தியா னன்மென் சதுக்கத்தை சுற்றி வளைத்த சீன ராணுவ பீரங்கிகள், அங்கிருந்த மாணவர்கள் மீது குண்டுமழை பொழிந்தன. இந்தக் கொடூரத் தாக்குதலில் ஆயிரக் கணக்கான அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அரசின் மீதான அச்சத் தில், சீனா முழுவதும் மயான அமைதி நிலவியது.

இந்த சூழலில், பெரிய அள விலான போராட்டத்தைஅடக்கிய இறுமாப்புடன், அடுத்த தினம், நூற்றுக்கணக்கான சீன ராணுவ பீரங்கிகள் தியானன்மென் சதுக்கம் அருகே வரிசையாக சென்று கொண்டிருந்தன.

அந்த தருணத்தில், தன்னந்தனி மனிதனாக ஒருவர், ராணுவ பீரங்கி களை வழிமறித்து நின்றார். பீரங்கி களின் மிரட்டல் எச்சரிக்கை ஒலியை சிறிதும் அசட்டை செய்யாமல், கை களில் வெறும் காய்கறிப் பைகளை ஏந்தியபடி நின்றார் அந்த சாமானி யன். இந்தக் காட்சியை கண்ட அங்கிருந்த அமெரிக்க பத்திரிகை யாளர்கள் 5 பேர் உடனடியாக அதை தங்கள் கேமராவில் புகைப் படம் எடுத்துக் கொண்டனர்.

சில நாட்கள் கழித்து சீனாவை தவிர பெரும்பாலான நாடுகளின் பத்திரிகைகளில் இந்தப் புகைப் படம் பிரசுரமாகி பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.

சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடுவதற்கான புதிய உத் வேகத்தை இப்புகைப்படம் வழங்கு வதாக பிரபல பத்திரிகைகள் கட் டுரை வரைந்தன.

பீரங்கிகளை மறித்த அந்த ஒற்றை மனிதன் குறித்த எந்த விவரமும் தெரியாததால், அவரை ‘டேங்க் மேன்' (பீரங்கி மனிதர்) என பத்திரிகைகள் வர்ணித்தன.

அடக்குமுறையால் அனைத்தை யும் சாத்தியமாக்கிவிடலாம் என என எண்ணிய அன்றைய சீன அரசு மட்டுமின்றி, அனைத்து சர்வாதிகார நாடுகளின் முகத் திலும் விழுந்த மற்றும் விழுந்து கொண்டிருக்கின்ற அடியாகவே இந்தப் புகைப்படம் இன்றளவும் விளங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x