Published : 12 Sep 2019 03:39 PM
Last Updated : 12 Sep 2019 03:39 PM

கனடா நாடாளுமன்றத்தைக் கலைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

ஜஸ்டின் 2015 ஆம் ஆண்டு கனடாவின் பிரதமராகப் பதவி ஏற்கும் போது தனது அமைச்சகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவேன் என்று தெரிவித்தார். இந்நிலையில் அவரது அமைச்சகத்திலிருந்து இரண்டு பெண்களை நீக்கி இருப்பது அவருடைய அரசியல் செல்வாக்குக்கு ஏற்பட்ட சரிவாகப் பார்க்கப்பட்டது. மேலும் அவரது அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜஸ்டினின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. மேலும், நாடாளுமன்றத்தில் ஐஸ்டினுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாத நிலை நீடிப்பதாக ’A Nanos Research’ கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கனடா நாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை அறிவித்தார். இதற்கு கவர்னர் ஜெனரல் ஜூலியும் ஒப்புதல் வழங்கினார். மேலும் பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியையும் ஜஸ்டின் அறிவித்தார்.

இதுகுறித்து ஜஸ்டின் கூறும்போது, “கனடாவில் பொதுத் தேர்தல் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது. நாங்கள் கடந்த 4 ஆண்டுகளில் நிறைய செய்திருக்கிறோம். தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கவுள்ளது” என்றார்.

கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதுவரும் பொதுத் தேர்தலில் ஐஸ்டினுக்குப் போதிய ஆதரவு இல்லாததால் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது கடினம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x