பஹாமஸில் டோரியன் புயல் தாக்குதல்: 2500 பேர் மாயம்

டோரியன் புயல், மார்ஷ் துறைமுகத்தில் உள்ள அபாகோ தீவுகளைத் தாக்கிய பின்னர், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அழிக்கப்பட்ட பகுதிகளில் இறந்தவர்களைத் தேடும் ஒரு போலீஸ் அதிகாரி. 
டோரியன் புயல், மார்ஷ் துறைமுகத்தில் உள்ள அபாகோ தீவுகளைத் தாக்கிய பின்னர், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அழிக்கப்பட்ட பகுதிகளில் இறந்தவர்களைத் தேடும் ஒரு போலீஸ் அதிகாரி. 
Updated on
1 min read

நசாவு.

பஹாமஸில் கடுமையான டோரியன் புயல் தாக்குதல் காரணமாக 2500 பேர் மாயமானதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமஸ் மற்றும் அபகோ தீவுகளை டோரியன் புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. இதில் பெரும் சேதம் பஹாமஸ் தீவுக்கு ஏற்பட்டது. இந்தத் தலைமுறைக்கான பேரழிவை இந்தப் புயல் விட்டுச் சென்றிருக்கிறது என்று டோரியன் தாக்கம் குறித்து பஹாமஸின் பிரதமர் கூறியிருந்தார்.

இந்நிலையில் டோரியன் புயலுக்கு பஹாமஸில் 43 பேர் பலியாகினர். சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பஹாமஸ் அரசு தெரிவித்தது.

இந்நிலையில் 2500 பேர் மாயமானது குறித்து பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் கார்ல் ஸ்மித் கூறுகையில், ''பஹாமஸில் வீசிக்கொண்டிருக்கும் கடுமையான டோரியன் புயல் தாக்குதலில் 2500 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் கதி என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போனவர்களில் சிலர் கடைசியாகக் கூட இடம்பெற்றிருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை பதிவேட்டில் இடம்பெற்றவர்களில் 2500 பேர் தற்போது காணவில்லை என்பதுதான் நிஜம்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்வகள் அல்லது வெளியேற்றப்பட்டவர்களின் அரசுப் பதிவேட்டை இன்னும் சரிபார்க்கவேண்டியுள்ளது'' என்று தெரிவித்தார்.

பஹாமஸைத் தாக்கிய புயல் 5 வகையைச் சார்ந்தது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது வெப்பமண்டல சூறாவளி எனப்படுகிறது. பூமியில் உருவாகக்கூடிய சூறாவளிகளிலேயே மிகவும் வலிமையானது இவ்வகை சூறாவளி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in