செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 16:52 pm

Updated : : 13 Sep 2019 10:50 am

 

அமெரிக்காவின் போர் நாட்டம் தோல்வியில்தான் முடியும்: ஈரான் எச்சரிக்கை

rouhani-says-us-warmongering-against-iran-will-fail

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நாட்டம் தோல்வியில் முடியும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதன்கிழமை ஈரான் அதிபர் ரசன் ரவ்ஹானி கூறும்போது, “ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் போர் நாட்டமும், விரோதப்போக்கும் தோல்வியில்தான் முடியும். இதனை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்.

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மேற்கொண்ட உறுதிப்பாடுகளை மேலும் குறைக்கத் தயாராக இருக்கிறது” என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

முன்னதாக, ஈரான் கடந்த வாரம் அணுசக்தி ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு வேண்டியதைச் செய்யலாம். எனவே இது தொடர்பாக உள்ள ஒப்பந்தத்தைக் கைவிட முடிவு செய்திருக்கிறோம் என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 2015-ல் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள சில நிபந்தனைகளை மீறி யுரேனியம் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாகச் செய்திகள் வெளியாகின.

இதனை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது.

2015-ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் யுரேனியம் செறிவூட்டலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுதத் தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.


இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஈரான் அணு ஆயுத சோதனை ஒப்பந்தங்களை அவ்வப்போது மீறி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

அமெரிக்காஈரான்தோல்விஉறுதிபாடுகள்விரோத போக்குஅணுஆயுத சோதனை
Popular Articles

You May Like

More From This Category

More From this Author