செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 16:26 pm

Updated : : 11 Sep 2019 16:28 pm

 

பிலிப்பைன்ஸில் மிதமான நிலநடுக்கம்

5-8-magnitude-quake-rattles-philippines

பிலிப்பைன்ஸில் சாராகனி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் ஆராய்ச்சி மையம் தரப்பில், “பிலிப்பைன்ஸில் உள்ள சாராகனி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏறபட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. மேலும் மிண்டாடோ தீவுப் பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் டாவோ நகரத்திலிருந்து 108 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பிலிப்பைன்ஸ் தேசியப் பேரிடர் மேலாண்மையும் எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக மிண்டானோ தீவுப் பகுதியில் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

ரிங் ஆஃப் ஃபயர்

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.


பிலிப்பைன்ஸ் படேன்ஸ் மாகாணப் பகுதி அதில்தான் உள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பிலிப்பைன்ஸ்மிதமான நிலநடுக்கம்பாதிப்புகள்அமெரிக்க புவியியல் மையம்ரிக்டர் அளவுகோல்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author