ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: கேரி லேம் எச்சரிக்கை

ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: கேரி லேம் எச்சரிக்கை
Updated on
1 min read

ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுவதாக ஹாங்காக் நிர்வாக இயக்குனர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை திரும்பப் பெற்ற போதிலும் பிற நிபந்தனைகளை நிறைவேற்றக் கோரி ஹாங்காங் போராட்டக்காரர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் வலுயுறுத்தி வருகின்றனர். ஹாங்காங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஹாங்காங்கை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு கையில் அமெரிக்கக் கொடியுடன் ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர்.

மேலும், சீனாவிடமிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் ட்ரம்ப்பின் முன் வைத்தனர். அத்துடன் திங்கட்கிழமை பள்ளி மாணவர்கள் பலரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாலையில் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 14 வாரங்களாக ஹாங்காங்கில் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஹாங்காங்கின் விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுவதாக ஹாங்காங் நிர்வாக இயக்குனர் கேரி லேம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவது முற்றிலுமாகத் தேவையற்றது. மேலும் இந்தத் தலையீடு அமெரிக்காவுடனான பொருளாதாரம் மற்றும் பரஸ்பர உறவுகளைப் பாதிக்கும்'' என்று தெரிவித்தார்.

ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாட்டினர் யாரும் தலையிட வேண்டாம் என்றும் ஹாங்காங் அரசின் முடிவுக்கு முழு ஆதரவையும், மதிப்பையும் சீனா அளிக்கும் என்றும் அந்நாடு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in