

சிரியாவில் கிழக்குப் பகுதியில் போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஈரான் ஆதரவு தீரவாதிகள் 19 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரியாவில் போர் கண்காணிப்பு குழு கூறும்போது, “ சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஈரான்னின் எல்லையில் அமைந்துள்ள பவ்கோமால் நகரின் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஈரான் ஆதரவு தீவிவாதிகள் 19 பேர் பலியாகினர். மேலும் அப்பகுதியில் இந்தத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
சிரிய - ஈரான் எல்லையில் உள்ள ஈரான் ராணுவ தளத்தை மையமாக கொண்டு இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாவில்லை.
இதற்கு இதற்கு பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதன் காரணமாக இஸ்ரேல் மீண்டும் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், , ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. தொடர்ந்து அங்கு போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலும் -ஈரானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்ரன