Published : 08 Sep 2019 09:17 AM
Last Updated : 08 Sep 2019 09:17 AM

இஸ்ரோவின் சந்திரயான்-2 திட்டம் குறித்து அமெரிக்க வானியற்பியலாளர் நீல் விளக்கம்

புதுடெல்லி

அமெரிக்க வானியற்பியலாளர் நீல் டிகிரீஸ் டைசன். இவர் விண்வெளி ஆராய்ச்சிகள் பல செய்துள்ளார். நாசா உட்பட பல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் பங்கேற் றுள்ளார். ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். தற்போது நியூயார்க்கில் உள்ள ‘ரோஸ் சென்டர் பார் எர்த் அண்ட் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார்.

இஸ்ரோவின் சந்திரயான்-2 திட்டம் குறித்து தனியார் செய்தி சேனலுக்கு நீல் டிகிரீஸ் டைசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விண்வெளி ஆராய்ச்சி மிகவும் கடினமானது. கடந்த 1960-ம் ஆண்டு களில் அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி கூறியதை நான் உங்களுக்கு மேற்கோள் காட்டு வேன். கென்னடி கூறும்போது, ‘‘விண்வெளி ஆராய்ச்சி மிகவும் எளிதானது என்பதால் அதை நாம் செய்யவில்லை. மிகவும் கடின மானது என்பதால்தான் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகிறோம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடினமானப் பணிகளைச் செய்யும் போது, இதற்கு முன்னர் நீங்கள் சென்றிருக்காத ஒரு இடத்துக்கு உங்களைக் கொண்டு செல்லும்’’ என்றார்.

எனவே, நீங்கள் கடினமானப் பணிகளைச் செய்யும் போதுதான் வித்தியாசப்படுகிறீர். உங்கள் மாணவர்கள் மத்தியில் நான் பேசுவதாக இருந்தால், வார கடைசி நாட்களாக இருந்தாலும், அதிகாலை 2.30 அல்லது 3 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க முடியுமா என்று பேசியிருப்பேன். உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் எளிதான வகுப்புகளை மட்டுமே தேர்ந்தெடுப்பவர்களாக இருக் கிறார்கள். ஆனால், எல்லோரும் அப்படி எளிதான வகுப்புகளைத் தேர்ந்தெடுத்து உயர்ந்த நிலைக்கு வந்தால், நீங்கள் எந்த வகையில் சிறந்தவர்களாக இருக்க முடியும்.

அதற்குப் பதில் கடினமான வகுப்புகளைத் தேர்ந்தெடுங்கள். அதில் உயர்ந்த நிலையை விட சற்று குறைவான இடத்தில் நீங் கள் இருக்கலாம். ஆனால், அப் போது நீங்கள் சிக்கல்களைத் தீர்க் கும் திறன் கொண்ட பிரமிடை ஏறுவீர்கள். ஏணியில் ஏறி மற்றவர் கள் பார்க்கும் தொலைவை விட வெகுதூரத்தில் இருப்பதையும் பார்ப்பீர்கள். எல்லாம் செய்து முடிக்கப்படும் போது, மக்கள் உங் கள் வீட்டுக்கு வெற்றிப் பாதையை போடுவார்கள். அதையே நீங்கள் ஒரு நாடாக செய்யும் போது பெரும் சாதனையாக இருக்கும்.

எதிர்காலத்துக்கு எங்களை வழிநடத்தி செல்லுங்கள். நில வுக்கு மட்டுமல்ல செவ்வாய் கிரகத் துக்கும் எங்களை அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு நீல் டிகிரீஸ் டைசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x