Published : 06 Sep 2019 07:10 PM
Last Updated : 06 Sep 2019 07:10 PM

அமெரிக்காவில் பலதுறைகளில் வேலையின்மை: சரிவு அச்சத்தில் தொழிற்துறைகள்

வாஷிங்டன், ஏ.எப்.பி.

கடந்த மாதத்தில் அமெரிக்காவின் முக்கியத் துறைகளில் ஆளெடுப்பு கடுமையாகக் குறைக்கப்பட வேலையின்மை விகிதம் சீரான முறையில் எந்த விதத்திலும் குறையாமல் 3.7% ஆக உள்ளதாக அரசுத்தரப்பு தரவுகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு ஓரளவுக்குப் பிரகாசமாக இருந்த வேலைவாய்ப்புகள் நடப்பு ஆண்டில் பலதுறைகளிலும் மந்தகதி அடைந்துள்ளதாக அரசு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது உலகின் பலமான பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர் டோனால்ட் ட்ரம்ப் வேலைவாய்ப்பு உருவாக்குபவர் என்ற எதிர்ப்பார்ப்பு அங்கு குறைந்து கொண்டே வருவதாகவும் இது அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அங்கு நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தமே 1,30,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாகியுள்ளன. இது எதிர்பார்ப்பை விட மிகமிகக்குறைவு என்று கூறும் ஆய்வாளர்கள் வேலையின்மை விகிதாச்சாரம் 3.7%லிருந்து குறையாமல் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அங்கு நிறுவன முதலீடுகள் குறைந்துள்ளன, காரணம் பொருளாதார சரிவு ஏற்படலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது, அதிபர் ட்ரம்பின் சில கொள்கைகள் இதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

இந்த ஆகஸ்ட் 1,30,000 வேலை வாய்ப்புகளிலும் கூட பாதி அரசு தரப்பு தேர்வுதான் என்று கூறப்படுகிறது. அமெரிக்க பொருளாதரத்தின் முக்கிய அங்கமான சேவைத்துறை, சில்லரை விற்பனை, போக்குவரத்து, பயன்பாட்டு தொழிற்துறைகள் தொடர்ந்து 2வது மாதமாக பலரை வேலையை விட்டு அனுப்பியுள்ளனர். சுரங்கத் துறையிலும் ஆட்குறைப்பு நடைபெறுகிறது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் வேலைக்கு ஆளெடுப்பு பாதியாகக் குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் தொழிற்துறை , தகவல் துறைகளில் வேலைக்கு புதிதாக ஆள்கள் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொழிலாளர் துறை தகவல்களின் படி கூலிகள் உயர்ந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x