

இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்கு பீர் ஒன்று சுமார் 50,000 பவுண்ட்களுக்கு விற்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தில் நடந்து ஆஷிஸ் கிரி்கெட் தொடர் செய்திகளை பதிவு செய்ய சென்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் பீட்டர் லாரஸ். இவர் மன்செஸ்டர் ஓட்டல் ஒன்றில் பீர் ஒன்றை வாங்கி அருந்தி இருக்கிறார்.
பீர் குடித்து முடித்தவுடன் அதற்கான பில்லை ஓட்டல் நிர்வாகம் வழங்கி உள்ளது. சுமார் 50,000 பவுண்ட்களை (இந்திய பண மதிப்பில் 48 லட்சம் வரை ) இதற்கு பில்லாக ஓட்டல் நிர்வாகம் வழங்கியதை கண்டு ராபர்ட் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
கிளப்பின் செயலால் சந்தேகம் அடைந்த ராபர்ட் இதுகுறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தவறுதலாக ராபர்ட் லாரஸிடம் பணம் பெறப்பட்டுள்ளதை ஓட்டல் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக கிளப் நிர்வாகம் ராபர்ட் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. தவறு குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
ராபர்ட்
மேலும் ராபர் லாரஸிடம் வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் அவருக்கு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர் ஓட்டல் நிர்வாகத்தினர்.
இந்த நிகழ்வு குறித்து ராபர்ட் கூறும்போது, “ இங்கிலாந்து ஆஸ்திரேலியர்களுக்கு எப்போது விலை அதிகம் விற்க்கப்படும் நாடாகவே பார்ப்பார்கள் ஆனால் இது மிக அதிகம். நான் வெறும் கிரிக்கெட் பற்றி எழுதுபவன்” என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.