சீனாவிடம் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத் திருத்தம் வாபஸ்: ஹாங்காங் நிர்வாகம் அறிவிப்பு

குற்றவாளிகளை ஒப்படைப்பற்கான சட்டம் வாபஸ் பெறப்படும் என்று ஹாங்காங் தலைமை செயல் அதிகாரி கேரி லாம் தொலைக்காட்சியில் நேற்று அறிவித்தார். படம்: பிடிஐ
குற்றவாளிகளை ஒப்படைப்பற்கான சட்டம் வாபஸ் பெறப்படும் என்று ஹாங்காங் தலைமை செயல் அதிகாரி கேரி லாம் தொலைக்காட்சியில் நேற்று அறிவித்தார். படம்: பிடிஐ
Updated on
1 min read

ஹாங்காங்

போராட்டக்காரர்களின் கோரிக் கையை ஏற்று சீனாவிடம் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்ட திருத்த மசோதா திரும்பப் பெறப்படும் என்று ஹாங்காங் அறிவித்துள்ளது.

ஹாங்காங்கில் குற்றம்சாட் டப்பட்ட குற்றவாளிகளை சீனா வுக்கு கொண்டு சென்று விசாரிக் கும் சட்ட திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இதற்கு எதிராக ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்தன. லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதி ராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாண வர்களும் போராட்டத்தில் குதித் தனர்.

புதிய சட்டத்தின் மூலம் ஹாங்காங்கை சீனா முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிப்பதாகவும் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறி கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடந்ததால் ஹாங்காங்கின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஹாங்காங் தலைமை செயல் அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், போராட்டத் துக்கு ஹாங்காங் அடிபணிந் துள்ளது. போராட்டத்துக்கு காரணமான சீனாவுக்கு குற்றவாளிகளை கொண்டு சென்று விசாரிக்கும் புதிய சட்ட திருத்த மசோதா திரும்பப் பெறப்படும் என்று ஹாங்காங் அறிவித்துள்ளது. பொதுமக்களின் கவலையைப் போக்கும் வகையில் மசோதா முழுமையாக திரும்பப் பெறப்படும் என்று ஹாங்காங் தலைமை செயல் அதிகாரி கேரி லாம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in