எதிர்பார்த்ததை விட அளவில் பெரியது புளூட்டோ: நாசா

எதிர்பார்த்ததை விட அளவில் பெரியது புளூட்டோ: நாசா
Updated on
1 min read

புளூட்டோவின் அளவை கணக்கிடுவது என்பது பல்வேறு காரணங்களினால் பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஆனால் தற்போது நாசா விண்வெளிக் கழகத்தின் நியூ ஹரைசன் விண்கலம் புளூட்டோ கிரகம் சுற்றளவில் 2,370கிமீ இருப்பதாக கண்டறிந்துள்ளது.

நியூ ஹரைசன்ஸ் விண்களத்தில் உள்ள தொலைதூர ரிகனைசான்ஸ் இமேஜர் மூலம் புளூட்டோவின் அளவு தற்போது அறுதியிடப்பட்டுள்ளது.

முன்னதாக புளூட்டோ சிறிய கிரகம் என்று கருதப்பட்டது. இப்போது நாசா விண்கலத்தின் இந்தக் கண்டுபிடிப்பு அந்தக் கணிப்பை முறியடித்துள்ளது.

"1930-ல் புளூட்டோவை கண்டுபிடித்ததிலிருந்து அதன் அளவு குறித்து விவாதங்கள் இருந்து வந்துள்ளன. இப்போது அந்த சவால் நிறைந்த கேள்விக்கு பதில் கண்டுபிடித்து முற்றுப் புள்ளி வைத்துள்ளோம்" என்று வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி பில் மெக்கினன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அளவு தெரியவந்துள்ளதையடுத்து புளூட்டோவின் அடர்த்தி முந்தைய கணிப்பை விட சற்றே குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதில் உள்ள பனியின் அளவு இன்னும் அதிகம் என்றும் கணிக்க முடிகிறது.

புளூட்டோவின் ட்ரோபோஸ்பியர் என்று அழைக்கப்படும் கீழடுக்கு எதிர்பார்த்ததைவிட திட்பக்குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் உள்ள பொருட்களில் தற்போது புளூட்டோதான் பெரியது என்பது தெரியவந்துள்ளது.

9 ஆண்டுகள், 3 பில்லியன் மைல்கள் பயணத்துக்குப் பிறகு நியூஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு 12,500 கிமீ தொலைவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in