

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்தியப் பயணம் அங்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “பிரதமர் நெதன்யாகு இந்திய பிரதமர் மோடியிடம் தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வருகை தருவதாகக் கூறியுள்ளார். இது இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அடுத்த வாரம் இந்தியாவுக்கு சுற்றப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகு இந்திய வருகையை ரத்து செய்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை நெதன்யாகு ரத்து செய்தார். நெதன்யாகு இந்தியப் பயணத்தின்போது இரு நாடுகள் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எண்ணப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு முதல் இந்தியப் பிரதமராக மோடி பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.