Published : 03 Sep 2019 03:25 PM
Last Updated : 03 Sep 2019 03:25 PM

பொருளாதாரத்தில் இந்தியாவை பாகிஸ்தான் விஞ்சினால்தான் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும்: இம்ரானுக்கு பாக். சிறுவனின் அட்வைஸ்

ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் தன் ஆதரவை பெரிய அளவில் வெளிப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ள நிலையில் உள்ளூர் சேனல் ஒன்றில் சிறுவன் ஒருவர் இம்ரான் கானுக்கே அறிவுரை தந்த வீடியோ வைரலானது.

பாகிஸ்தான் முதலில் தன் பொருளாதாரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் பிறகுதான் காஷ்மீர் விவகாரமெல்லாம் என்று அந்தச் சிறுவன் இம்ரான் கான் அரசைக் கண்டித்துள்ள வீடியோ வைரலாக வலம் வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கூறுவதை உலக நாடுகள் சீரியஸாக அணுக வேண்டும் என்றால் இந்தியா போன்று பொருளாதார நிலையை எட்டினால்தான் முடியும் என்கிறார் அந்தச் சிறுவன்.

“பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை உலகின் பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகப் பிணைப்பில் உள்ளது. இந்தியா உலகம் முழுதும் தன் நிலைப்பாட்டை பற்றி எடுத்துக் கூறி தன் குரலை மற்றவர்கள் கேட்குமாறு செய்து வருகிறது. எனவே பாகிஸ்தான் தன் பொருளாதாரத்தை உயர்த்தி இந்தியாவின் செல்வாக்கு போல் உயர்ந்தால்தான் பாகிஸ்தான் தங்கள் குரலை சர்வதேச நாடுகள் கேட்குமாறு செய்ய முடியும். இந்தியாவைப் பொருளாதார ரீதியாகத் தோற்கடிக்காமல் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தானினால் தீர்க்க முடியாது.

இந்தியாவுடனான உறவுகளை முறித்துக் கொண்டு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்காது. ஆகவே நம் பொருளாதாரத்தில் நாம் கவனம் செலுத்துவது நல்லது. இதுவே காஷ்மீர், பலுசிஸ்தான் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்” என்று அந்தச் சிறுவன் கூறியது வைரலாகி வருகிறது

ஐ.எம்.எஃப்., சீனா, சவுதி அரேபியா போன்றவை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக உதவி புரிந்தாலும் பாகிஸ்தான் பொருளாதாரம் இன்னமும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதையும் காணவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x