

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹுபி மாகாணத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஹுபி மாகாணத்தின் என்ஷி நகரத்தில் உள்ள சாயாங்போ தொடக்கப் பள்ளி ஒன்றில் காலை பள்ளி மாணவர்கள் பள்ளியின் வளாகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கும்போது சுமார் 40 வயதான நபர் ஒருவர் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில் 8 மாணவர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை” என்று செய்தி வெளியானது.
சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரிடம் தாக்குதலுக்கான விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழக்கப்படும் என்று அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிக் குழந்தைகள் மீதான இம்மாதிரியான தாக்குதல்கள் சமீபநாட்களாக சீனாவில் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதே மாதிரி பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அம்மாகாண அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.