

பெய்ஜிங்
ஜோடிகளின்றி தவிக்கும் 'சிங்கிள்' களை திருமண பந்தத்தில் இணைப்பதற்காக பிரத்யேக ரயில் ஒன்றினை சீன அரசு இயக்கி வருகிறது.
‘காதல் ரயில்' எனப் பெயரிடப் பட்டிருக்கும் அந்த ரயிலுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக் கெடுப்பின் படி, சீனாவில் 20 கோடி இளைஞர்களும், இளம் பெண்களும் திருமணம் ஆகாமல் இருப்பது தெரியவந்தது. அவர் களுக்கான வாழ்க்கைத் துணை கிடைக்காததே இந்த நிலைமைக்கு காரணம் எனக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வந்த சீன அரசு, 'சிங்கிள்' களின் துயரை போக்குவதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத் தியது. அதன்படி, 'காதல் ரயில்' என்ற பெயரில், ‘சிங்கிள்' இளைஞர் கள், இளம்பெண்களுக்காகவே பிரத்யேக ரயில் ஒன்றை சீனா உருவாக்கியது.
10 பெட்டிகளுடன் கூடிய இந்த ரயிலானது, சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள நகரமான சோங்கிங்கில் இருந்து தெற்கில் உள்ள க்யான்ஜியாங் நகரம் வரை செல்லும். 3 நாட்கள் பயணமாகும் இந்த ரயிலில் 1,000 பேர் வரை பயணிக்கலாம்.
உணவுக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், நவீன விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த ரயிலில் செய் யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் இந்த ரயில், பயணிகளுக்காக ஒவ்வொரு இடத்திலும் தலா 2 மணிநேரம் நிற்கும். இந்தப் பயணத்தின்போது, தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இத்தனை சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த ரயில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த காதல் ரயில், இதுவரை 3 பயணங் களை மட்டுமே மேற்கொண் டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்த 3,000 பேரில் 10 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக் கான ரயில் பயணம் கடந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.