

வரும் செப்டம்ப்ர் 4 - 5 ஆம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கிறார்.
இந்தப் பயணத்தில் இரு நாடுகளின் அரசியல் ரீதியான உறவு குறித்தும் பாதுகாப்பு, வர்த்தகம் , அணுசக்தி குறித்தும் ஆலோசிக்கப்படும். இது ஒரு புது அத்தியாயத்திற்கான சந்திப்பாக இருக்கும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ் தெரிவித்தார்.
இதில் இந்தியாவில் ஆறு அணுமின் நிலையங்களை உருவாகுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கருதப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதினுடன் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு குறித்து இருவரும் ஆலோசிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதோடு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட பாகிஸ்தான் வலியுறுத்தியது. பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன.
இந்த நிலையில் விவகாரம் தொடர்பாக, ”காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவு இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவாகும். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” என்று ரஷ்யா தனது நிலைப்பாட்டை தெரிவித்தது குறிபிடத்தக்கது.