

பாகிஸ்தானில் வடகிழக்குப் பகுதியில் பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், “ பாகிஸ்தானில் கைபர் பக்துன்காவா மாகாணத்தில் பக்ருவிலிருந்து கண்டியாவுக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பேரில் 24 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். விபத்து பலியனவர்களில் பலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
பேருந்தில் அதிகப்படியான பயணிகளுடன் பயணித்ததே இந்த விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் போன்கள் போன்ற தகவல் தொழில் நுட்பங்களும் சரிவர இயங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சாலைகள் மோசமாக இருப்பதன் காரணமாக அங்கு சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அ ந் நாட்டில் சமீபத்தில் வந்த புள்ளி விவரவங்கள் தெரிவிக்கின்றன.