இலங்கை உள்நாட்டு போரின்போது காணாமல்போனவர் விவரம் கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற பேரணி.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற பேரணி.
Updated on
1 min read

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனஈர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

போர்கள், அரசியல், வன்முறை உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்ட லட்சக்கணக்கானோர் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக் கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆக.30-ம் தேதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2011-ல் அறிவித்தது.

இலங்கையில் 1983-ம் ஆண்டு முதல் 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு போரின்போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் இலங்கை அரசையும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தீவிரமாக எதிர்த்து கருத்துகளை வெளியிட்ட செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி ராணுவத்தில் சரணடைந்த பலரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள், உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

இந்நிலையில், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களில் கவனஈர்ப்பு போராட்டங்களும், தலைநகர் கொழும்புவில் கண்டன ஆர்ப்பாட்டமும் நேற்று நடைபெற்றன.

இதில், போர் காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், மனித உரிமை செயற் பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை பற்றிய முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும். உயிருடன் இருப்பவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இது தொடர்பான உண்மை நிலையை அறிய சர்வதேச நாடுகளின் விசாரணை தேவை என்று வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in