

வாஷிங்டன்
அமெரிக்காவில் புதிதாக விண் வெளி போர் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக விரைவில் விண் வெளி படை தொடங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ராணுவம், கடற்படை, மெரைன் (தரை-கடற் படை), விமானப் படை, கடலோர காவல் படை ஆகிய 5 விதமான படைப் பிரிவுகள் செயல்படுகின் றன. இதைத் தொடர்ந்து 6-வதாக விண்வெளி படையை அமைக்க அந்த நாடு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக விண் வெளி போர் கட்டுப்பாட்டு மையத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன் தினம் தொடங்கிவைத்தார். அப் போது அவர் பேசியதாவது:
நிலம், வான், கடல் வழியிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தனித்தனி படைப்பிரிவுகள் உள் ளன. அடுத்த கட்டமாக விண் வெளி மூலமான அச்சுறுத்தல் களை எதிர்கொள்ள விரைவில் விண்வெளி படை தொடங்கப்படும். இந்த திட்டத்தில் முதல்கட்டமாக விண்வெளி போர் கட்டுப்பாட்டு மையத்தை இப்போது தொடங்கியுள்ளோம்.
அமெரிக்க செயற்கைக்கோள் களின் பாதுகாப்பு, விண்வெளி அச்சுறுத்தல்களை எதிர்கொள் வதற்காக புதிய படைப்பிரிவு தொடங்கப்பட உள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையை போன்று விண்வெளி படைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படும். விண்வெளியிலும் அமெரிக் காவே ஆதிக்கம் செலுத்தும். அமெரிக்கர்கள் மீண்டும் நிலவுக்கு செல்வார்கள். விரைவில் செவ் வாய்க் கிரகத்துக்கும் செல்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை அமெ ரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் பலமுறை சோதனை செய் துள்ளன. இந்த செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணைகள் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் களை அழிக்க முயற்சி மேற் கொள்ளப்படலாம். இதை எதிர் கொள்ளவும் வரும் காலத்தில் விண்வெளியில் நடைபெற உள்ள போர்களை வழிநடத்தவும் புதிதாக விண்வெளி படையை தொடங்க அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டு பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கைக்கோள் அழிப்பு ஏவு கணையை கடந்த மார்ச் 27-ம் தேதி இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை பெற்றுள்ள 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவு, செவ்வாய்க் கிரகத் துக்கு ஏற்கெனவே விண்கலங் களை அனுப்பியுள்ளது. வரும் காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு போட்டியாக விண்வெளி யில் இந்தியாவும் கோலோச்சும் என்று சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.