Published : 28 Aug 2019 07:02 PM
Last Updated : 28 Aug 2019 07:02 PM

உலகின் கடைசி 2 வெள்ளை பெண் காண்டாமிருகங்கள்: செயற்கையான முறையில் 7 முட்டைகளை கருவுற செய்த விஞ்ஞானிகள்

உலகில் கடைசி மீதமுள்ள இரண்டு வெள்ளை காண்டா மிருகங்களிடமிருந்து 7 முட்டைகள் வெற்றிகரமாக செயற்கையான முறையில் கருவுற செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாறி வரும் கால நிலை மாற்றம் மற்றும் வாழ்வியல் முறை காரணமாக பல்வேறு விலங்கினங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

இதற்கு எடுத்துகாட்டாய், கடந்த ஆண்டு உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான சுடான் தனது 45 வயதில் கென்யாவில் மரணமடைந்தது.

சுடானுக்கு வயது முதிர்வு காரணமான உடல் உபாதைகள் இருந்ததாகவும், தசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி போனது. இதனைத் தொடர்ந்து சுடானை கருணைக் கொலை செய்ய உள்ளதாக கென்யாவில் செயல்படும் 'Ol Pejeta’ தனியார் வனவிலங்களுக்கான அமைப்பு தெரிவித்தது.

ஆண் வெள்ளை காண்டாமிருகமான சுடானுடன், நஜின், ஃபட்டு என்கிற 2 வெள்ளை பெண் காண்டாமிருகங்களும் அங்கு வசிக்கிறது. இந்த நிலையில் சுடான் உயிரிழந்ததால் இந்த இனத்தின் கடைசி ஆண் இனம் அழிந்து போனது. இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே எஞ்சி இருந்தன.

ஆண் காண்டாமிருகம் இல்லாததால் இனப்பெருக்கம் இல்லாமல் இவைகளுக்கு அடுத்து இந்த இனம் அடியோடு அழிந்துவிடும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நைரோபியின் வடக்குப் பகுதியில் சுடானுடன் வசித்து வந்த இரண்டு வெள்ளை பெண் காண்டா மிருங்கங்ளான நஜின், ஃபட்டுவிலிருந்து 10 முட்டைகளை எடுத்து அதை செயற்கையான முறையில் கருத்தரிக்க முயன்றதில் 7 முட்டைகள் வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக பெர்லினில் இயங்கும் வனவிலங்கு ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டைகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கென்யாவில் சுமார் 1970-ம் ஆண்டுகளில் சுமார் 20,000 எண்ணிக்கையில் காண்டா மிருகங்கள் இருந்துள்ளன. இவற்றின் எண்ணிக்கை படிபடியாக குறைந்து தற்போது 650 காண்டா மிருகங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கருப்பு காண்டா மிருகங்கள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x