Published : 28 Aug 2019 11:15 AM
Last Updated : 28 Aug 2019 11:15 AM

உளவு பார்த்ததாக ஆஸ்திரேலிய எழுத்தாளரை கைது செய்த சீனா

சீனாவால் கைது செய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலிய எழுத்தாளர்

உளவு பார்த்ததாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர் யாங் ஹெங்ஜுன் கைது செய்யப்பட்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் எழுத்தாளராகவும், அரசியல் வர்ணனையாளராக இருப்பவர் யாங் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் மாயமானதாக கூறப்படுகிறது. அவர் நலன் குறித்து குடும்பத்தினர் கவலை கொண்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை சீனா தரப்பில், “54 வயதான யாங் ஹெங்ஜுன் சட்டவிரோதமாக சீனாவை உளவு பார்த்தற்காக கைது செய்யப்பட்டு தற்போது அதற்கான விசாரணை அவர் எதிர்க் கொண்டுள்ளார்.

அவரது உடல் நிலை தற்போது நலமாக உள்ளது. சீன சட்டத்துக்கு உட்பட்டு இந்த வழக்கு நடைபெறும். இதில் ஆஸ்திரேலியா தலையிட வேண்டாம் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும், எதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தை எங்களிடம் சீனா தெரிவிக்கவில்லை. அவர் ஜனவரி மாதம் முதல் அங்கு கடுமையான சூழ் நிலையை சந்தித்து வருகிறார். இந்தச் நிலையில் யாங்கின் குடும்பத்தினருடன் நாங்களும் துணை நிற்போம் என்று ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சீனா கேட்டுக் கொண்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x