

சூடானில் பழங்குடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 37 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
இதுகுறித்து சூடான் சமூக செயற்பாட்டாளர்கள் கூறும்போது, “சூடானில் கிழக்கு கடற்பகுதியில் கடந்த இரு வாரங்களாக பானி மற்றும் நுபா என்ற பழங்குடிகளுக்கு கடந்த இரு வாரமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 34 பலியாகினர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தமாக மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்த மோதலுக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூடானை பொறுத்தவரை அங்கு ஏராளமான பழங்குடி இனங்கள் உள்ளன. இதில் தொடர்ந்து இந்த பழங்குடி அமைப்புகளுக்கிடையே மோதல் ஏற்படுவது வழக்கமான ஒன்றான நிகழ்வாக உள்ளது.
சூடானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெரும் அளவிலான போராட்டத்தை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நடத்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பழங்கு இன குழுக்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.