பஹ்ரைன் பயணத்தில் இந்தியப் பிரதமர்: வணக்கம் என்று பதில் சொன்ன ஆச்சரியம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க பொதுச்செயலாளருடன் நரேந்திர மோடி
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க பொதுச்செயலாளருடன் நரேந்திர மோடி
Updated on
1 min read

தன்னிடம் அறிமுகபடுத்திக்கொண்ட தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரிடம் சட்டென வணக்கம் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இரண்டுநாள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பஹ்ரைன் சென்றுள்ளார்.

ஞாயிறு மாலை பஹ்ரைன் தேசிய அரங்கத்தில் பல்லாயிரகணக்கான இந்தியர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். திங்கட்கிழமை காலை பஹ்ரைன் தலைநகரான மனாமாவில், 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, கோவிலின் பராமரிப்பு பணிகளை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பஹ்ரைன் வாழும் இந்திய முக்கிஸ்தர்களை சந்த்தித்தார்.

அப்போது பஹ்ரைனில் தமிழர்களுக்கு பல சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர், தூத்துக்குடியை சேர்ந்த திரு. ௧.செந்தில்குமார் அவர்கள் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பிரதமர், செந்தில்குமாருக்கு வணக்கம் என்று தமிழில் சொன்னார். இதைக் கேட்டவுடன் அங்குள்ள அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

பஹ்ரைன் நாட்டிற்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in