Published : 26 Aug 2019 10:35 AM
Last Updated : 26 Aug 2019 10:35 AM

பிரதமர் மோடி - ட்ரம்ப் இன்று சந்திப்பு: காஷ்மீர் விவகாரம், வர்த்தக மோதல் குறித்து பேச வாய்ப்பு

பாரிஸ்

ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது காஷ்மீர் விவகாரம், உலகளாவிய வர்த்தக மோதல் குறித்து இருதலைவர்களும் விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.

பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார்.

அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு முதல்முறையாக பிரதமர் மோடி சென்றார். அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபாவைச் சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மீண்டும் பாரிஸ் திரும்பிய பிரதமர் மோடி அங்கு நடைபெறும் ங்கு நடைபெறும் ‘ஜி-7’ மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் பிரச்சினைகள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை எனினும் சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கேற்றுள்ளளது. இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசி வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசிய பிரதமர் மோடி வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆலோசித்தார்.


இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசுகிறார். காஷ்மீர் விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை ட்ரம்ப் கூறியிருந்தார். இதுபற்றி பிரதமர் மோடியை சந்திக்கும்போது பேசுவதாகவும் கூறியிருந்தார். எனவே இதுபற்றி இருதலைவர்களும் விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.


இதுமட்டுமின்றி உலக அளவில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பெரிய அளவில் வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இதனால் உலக பொருளாதாரமே சுணக்கம் அடையும் சூழல் உருவாகியுள்ளது. பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பின் போது விரிவான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x